இன்றைய திரைப்படம்
"அபூர்வ ராகங்கள்" படத்தில் அறிமுகமான போதே பலருடைய கவனத்தையும் கவர்ந்தவர் ரஜினிகாந்த்.
தொடர்ந்து வில்லனாக மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே போன்ற சில படங்கள்,
கவிக்குயில்,
புவனா ஒரு கேள்விக்குறி, தப்புத் தாளங்கள் போன்ற நல்ல நடிப்பு படங்கள்,
என ஒரு 25 படங்களுக்கு மேல் தன் திறமையான, ஸ்டைலான நடிப்பால் கிடைத்ததுதான் "சூப்பர் ஸ்டார்" பட்டம்.
இதன்பின் பெயருக்கு தகுந்த போலவே,
நல்ல இயக்குனர்களின் கைவண்ணத்தில் திரையுலகில் தனது தனிப்பட்ட முத்திரையை பதித்தார்.
ஞாயிறு புரோக்ராம் என்ன?
"ரஜினி படம் போலாம்".
தீபாவளிக்கு என்ன படம் பாக்கலாம்?
"ரஜினி படந்தான்".
தீபாவளினா ரஜினி படம்தான் என்றொரு பொற்காலம் இருந்தது.
கலகலப்பான படம் பாக்கனுமா?
ரஜினி படந்தான் பெஸ்ட்.
ஏன்னா அவரே அந்தப்படத்தில் காமெடி,அவரே ஃபைட், அவரே காதல் கலாட்டா, இதை வேறு எந்த நடிகரிடமாவது பார்ப்பது சிரமந்தான்.
80, 90களில் இவர் பெயர் தெரியாத குழந்தைகளே இல்லை எனலாம்.
100 நாள்களை சர்வசாதாரணமாக கடந்தது இவர் நடித்த படங்கள்.
இவர் இப்படிப்பட்ட நடிகர் தான் என அன்றே கணித்து சூட்டப்பட்ட பெயர்தான் சூப்பர் ஸ்டார்.
திரையுலகில் உச்சம் தொட்டு,
அதை இன்று வரை தக்க வைத்துக் கொண்டுள்ள நட்சத்திரம்.
திரையுலகில் ஒரு அந்தஸ்தை தொட வேண்டும் என்றால் ரஜினி போல வரவேண்டும் என்பதே பல நடிகர்களின் கனவு.
இப்ப சூப்பர்ஸ்டார் பெயரை தங்களுடைய பெயருடன் சேர்க்க பல நடிகர்களுக்குள் போட்டி. சூப்பர் ஸ்டார் என்றால் எல்லோருமே ரஜினியாகிவிடலாம் என்ற கனவு.
தொப்பியும், கண்ணாடியும் வைத்தால் எம்ஜிஆர் ஆகலாம் என்று வதந்தி இருந்ததே அதுமாதிரி.
இந்த சூப்பர்ஸ்டார் பெயரை முதலில் தன் பெயருடன் இணைத்தவர் சிலம்பரசன் தான்.
"லிட்டில் சூப்பர் ஸ்டார்" என தன் பெயருடன் இணைத்துக் கொண்டவர், பின்னர் வளர்ந்த பின் "யங் சூப்பர் ஸ்டார்" என சில படங்களில் மாற்றினார்.
பின்னர் அதும் கைவிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் ஆக இன்னும் வளரனும் என யோசித்திருப்பார்.
நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு இந்த பட்டத்தை வைக்க ஆசைப்படுகிறார்கள் சிலர்.
அது கூட அவரவர்களது விருப்பம் என விடலாம். வருங்கால பிரதமர்னா உடனே பிரதமர் ஆயிடுவாங்களா?.
இதை மறுத்து தளபதி ஒரு மறுப்பு கூட போடாதது சிரிப்பாக வருகிறது.
இப்படி உதார் விட்டே ஒவ்வொரு முறையும் விஜய்யை குழிக்குள் தள்ளி விடுகிறார்கள் அவரது ஆரூயிர் ரசிக கண்மணிகள்.
தற்போது மிக மும்முரமாக உள்ளனர் என்பதுதான் உச்சகட்ட காமெடி.
ரஜினி அளவுக்கு என்ன சாதித்து விட்டார்கள் என இதை சொல்லி
பேசுகிறார்கள் என புரியவில்லை.
கடையில் வாங்கற போண்டா பஜ்ஜி மாதிரி
நினைக்கறாங்க போல.
இதெல்லாம் மக்கள் முடிவு பண்ணனும்.முதல்ல இவர் படங்களை
மக்கள் ரசிக்கனும்.
"கலகலப்பான படமா?
வாங்க விஜய் படம் போலாம்னு" யாராவது சொல்லி கூப்பிட்டால், கூப்பிட்டவர் எதில் அடிவாங்குவார் என்று சொல்ல முடியாத நிலையில் இவரது படங்கள் உள்ளன.
இதில் இந்த ஆசை வேறு.
போய் மொதல்ல உருப்படியா 4 படம் கொடுக்க சொல்லுங்க விஜய் ரசிக குஞ்சுகளே.
புரட்சி தலைவர் ஒருவர் தான்,
நடிகர் திலகம் ஒருவர்தான்,
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிக்கு மட்டுமே பொருந்தும். வேறு யாருக்கும் இது பொருந்தாது.