பணம் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய மேஷ ராசிக்காரர் , நினைத்த காரியம் நிறைவேறும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
பணம் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய மேஷ ராசிக்காரர் , நினைத்த காரியம் நிறைவேறும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். பணம் நகைகளைக் கையாளுவதில் கவனம் தேவை.
பரணி: பேச்சில் கவனம் அவசியம். குடும்பத்தினர் தேவைகளைக் கண்டறிந்து நிறைவேற்றுவீர்கள்.
கார்த்திகை 1: நண்பர்கள் உதவியுடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.
ரோகிணி: வீண் குழப்பம் அதிகரிக்கும். அதனால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கவனம் தேவை.
மிருகசீரிடம் 1, 2: வாழ்க்கைத் துணையின் வழியே அனுகூல நிலையை அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: திடீர் பயணம் உண்டாகும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுங்கள்.
திருவாதிரை: எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: அரசு பணியாளருக்கு அவசர வேலைகள் வந்து அலைக்கழிக்கும். செயலில் சங்கடம் உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4: நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
பூசம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வசூலாகும். நிதிநிலை உயரும்.
ஆயில்யம்: வழக்கு வெற்றியாகும். கூட்டுத் தொழில் தொடங்குவது பற்றி நண்பருடன் ஆலோசிப்பீர்கள்.

சிம்மம்
மகம்: செயல்களில் இருந்த இடையூறுகள் விலகும். தடைபட்ட வேலைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூரம்: நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள்.
உத்திரம் 1: பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். பண வரவு உண்டு

கன்னி
உத்திரம் 2, 3, 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
அஸ்தம்: பழைய பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். உறவுகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
சித்திரை 1, 2: மனதில் நிம்மதி உண்டாகும். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.

துலாம்
சித்திரை 3, 4: அமைதி காக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட வேண்டாம்.
சுவாதி: எதிர்பாராத ஒரு பிரச்னையை சந்திப்பீர்கள். பிறருடன் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
விசாகம் 1, 2, 3: செயல்களில் குழப்பம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சங்கடத்திற்கு ஆளாகும்.

விருச்சிகம்:
விசாகம் 4: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
அனுஷம்: குடும்பத்தில் மற்றவர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.
கேட்டை: கணவன் மனைவிக்கிடையே உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவு அதிகரிக்கும்.

தனுசு
மூலம்: செயல்களில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். எண்ணம் நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும்.
பூராடம்: சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும்.
திருவோணம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு பேசி தீர்வு காண்பீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும்.
அவிட்டம் 1, 2: உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். இழுபறியாக இருந்த பிரச்னை தீரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். நீங்கள் எண்ணியதை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
சதயம்: எதிர்பார்த்தவற்றில் அனுகூலம் காண்பீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு எண்ணம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: பொழுது போக்கு விஷயங்களில் எண்ணம் செல்லும். செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4: எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும்.
ரேவதி: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். துணிச்சலுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.