அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

#India #Delhi #government
Mani
1 year ago
அக்னிபத்  திட்டத்திற்கு எதிரான மனுவை டெல்லி உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

இந்திய பாதுகாப்பு படையின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.

17½ முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் இந்த அக்னிபட் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி

ஆனால், இந்தத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையும் இணைந்து அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப் பட்டன.

இதனிடையே மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபட் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரித்து அக்னிபட் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இந்தத் திட்டம் தேசிய நலனுக்காகவும், பாதுகாப்புப் படைகளை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்டதாகக் கூறியது.