மருத்தவமனையில் கூட நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவான முட்டையினை நாம் எப்படிச் சாப்பிட்டால் நல்லது.

#சமையல் #முட்டை #உணவு #தகவல் #லங்கா4 #Cooking #Egg #meal #information #Lanka4
மருத்தவமனையில் கூட நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவான முட்டையினை நாம் எப்படிச் சாப்பிட்டால் நல்லது.

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கூட அதிகமாக முட்டையினை தான் ஆலோசனை செய்கிறார்கள். அந்த அளவிற்கு முட்டை சிறந்த தொரு ஊட்டச்சத்துள்ள உணவாகும்.  பொதுவாக முட்டை என்றாலே நாட்டுக்கோழி முட்டை தான் உடலுக்கு நல்லது பிராய்லர் கோழி முட்டை உடலுக்கு கேட்டது என்றும் சிலர் கூறுவதுண்டு. அதனால் அதிகமாக நாட்டுக்கோழி முட்டையினை சாப்பிட்டு வருகிறோம்.

ஆனால் முட்டையினை அவித்து மட்டும் நாம் சாப்பிடுவதில்லை. முட்டை ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை வறுவல் மற்றும் முட்டை தொக்கு போன்ற முறைகளில் தான் நாம் நமக்கு பிடித்தவாறு சமைத்து சாப்பாட்டு வருகிறோம். முட்டையினை சாப்பிடும் முறையை பொறுத்து  அதனால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆகவே முட்டையினை சாப்பிடும் முறை மற்றும் அளவு பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.

முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. அதிலும் மஞ்சள் கருவில் 2.8 கிராம் புரோட்டீனும் மற்றும் வெள்ளை கருவில் 3.5 கிராம் புரோட்டீனும் நிறைந்து இருக்கிறது.

முட்டையின் வெள்ளை கருவில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

  • மெக்னீசியம்
  • பொட்டாசியம்
  • குளோரின்
  • சல்பர்
  • சோடியம்
  • சிங்க்

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

  • வைட்டமின் A
  • வைட்டமின் B6
  • வைட்டமின் B12
  • வைட்டமின் D
  • வைட்டமின் K
  • வைட்டமின் E

முட்டை சாப்பிடும் முறை:

முட்டை சிறந்த ஒரு ஊட்டச்சத்துள்ள உணவென்றாலும் நாம் சரியான முறையில் முட்டையினை சாப்பிடாதபோது நமது உடலில் பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடும்.

ஒரு வாரத்திற்கு 4 முதல் 7 முட்டைகளை நாம் சாப்பிடுவதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் 75% வராது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் அதுபோல முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் முட்டையின் வெள்ளை கரு நமது உடலில் கரோட்டின் ஆய்டு உறிஞ்சுதலை அதிகரிக்க செய்து இரத்தத்தின் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.  

அதுமட்டும் இல்லாமல் நமது உடல் தமணிகளில் கொழுப்புகள் போய் சேராமல் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் இந்த முட்டையின் வெள்ளை கரு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

ஆகவே முட்டையின் வெள்ளை கருவினை நாம் சேர்த்து கொள்வதன் மூலம் இளைஞர்களுக்கு வரும் மாரடைப்பினை தவிர்க்க முடியும் என்று ஆய்வின் மூலம் கூறப்படுகிறது. அதனால் போதுமான அளவு முட்டையின் வெள்ளை கரு சாப்பிட வேண்டும்.

மேலும் நாம் முட்டை சாப்பிடுவது மட்டும் ஆரோக்கியம் கிடையாது. அதனை எப்படி சரியான முறையில் சாப்பிடுகிறோம் என்பதில் தான் நமது ஆரோக்கியம் உள்ளது. அத்துடன் மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் கொலஸ்ரோல் உள்ளவர்கள் முட்டையின் வாராந்த உள்ளெடுப்பை தீர்மானிக்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!