சர்வதேச அளவில் ராஜமௌலியின் அடுத்த படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
'மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.' போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற டைரக்டராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்- நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
“பாகுபலி” படத்தில் நடித்த பிறகு பிரபாஸின் மார்க்கெட் மதிப்பு உயர்ந்தது. "ஆர்.ஆர்.ஆர்." இப்படம் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்தது.
ராஜமௌலியின் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தற்போது மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது சூப்பர்மேன் கதையைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமௌலியின் அடுத்த படத்தை பலரும் எதிர்பார்க்கின்றனர். பட்ஜெட், நடிகர்கள் தேர்வு மற்றும் தயாரிப்பு விவரங்கள் பற்றிய தகவல்கள் தினமும் வெளியிடப்படுவதால், படத்தைச் சுற்றியுள்ள யூகங்களுக்கு பஞ்சமில்லை. ஹாலிவுட் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஹாலிவுட்டில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமௌலி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் நடிக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அமீர் கான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் ராஜமௌலி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் சீனாவிலும் வெளியாகவுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, துபாய் என முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் படத்தை வெளியிட இருக்கிறார் ராஜமௌலி. OTT நிறுவனங்களுடன் ராஜமௌலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ராஜமௌலியின் அடுத்த படத்திற்கான பட்ஜெட் குறித்த இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும், சர்வதேச தரத்திலும், அதிநவீன தொழில்நுட்பத்திலும் சிறந்த முறையில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.