தூத்துக்குடி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மாசி மகம் திருவிழா
கழுகுமலை கழுகாசலமூர்த்தி ஆலயத்தில் மாசி மகம் திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் மாசி மகம் திருவிழா வரும் 6-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 5 மணிக்கும், மாலை 6 மணிக்கும் கோயில் நடை திறக்கப்படும். திருவனந்தாள் பூஜை, வேள்வி பூஜை, காலசந்தி பூஜை நடைபெறும். பின்னர் காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை வலம் வந்து கிரிவலம் செல்கின்றனர். 11 மணிக்கு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வள்ளி-தெய்வானை அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழாவையொட்டி, மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கழுகுமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.