ஜி20 வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாடு இன்று புதுடெல்லியில் ஆரம்பம்
#India
#America
#Russia
#China
#SriLanka
#world_news
#Lanka4
Kanimoli
1 year ago
இந்த ஆண்டு ஜி20 கூட்டமைப்புக்கு அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் வாவ்ரோவ் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
பணவீக்கம், சர்வதேச பொருளாதார நெருக்கடி, உணவு, எரிபொருள், உரம் விலை உயர்வு, சரக்கு, சேவைகளின் தேவை குறைந்து வருவது போன்றவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பன்னாட்டு நட்புறவு, பயங்கரவாத தடுப்பு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.