இன்றைய நாள் வீணாக்கிய சக்தியை மீளப் பெற செட்டி நாடு சிக்கன் சுக்காவை இப்படி சமைத்துப் பாருங்கள்.
நம்மில் சிலருக்கு சிக்கன் சுக்கா என்றால் சொல்ல தேவையில்லை. அந்த அளவிற்கு விரும்பி உண்பார்கள். அதிலும் பெயர் பெற்ற செட்டிநாடு சிக்கன் சுக்கா என்றால் சொல்லவா வேண்டும். அந்த அளவிற்கு அதன் சுவை இருக்கும். இதனை எப்படி என்று தெரிந்துக்கொண்டு உங்களுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும் செய்து கொடுத்து அசத்தலாம் இன்று.
தேவையான பொருட்கள்:
- சிக்கன்- 1 கிலோ
- மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
- தயிர்- 4 தேக்கரண்டி
- நெய்- 4 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம்- 1 கப்
- வெல்லம்- சிறிய துண்டு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
- மிளகு- 1 தேக்கரண்டி
- சீரகம்- 1 தேக்கரண்டி
- மல்லி- 1 தேக்கரண்டி
- சோம்பு- 1 தேக்கரண்டி
- காஷ்மீர் மிளகாய்- 7
- காய்ந்த மிளகாய்- 6
- இஞ்சி- 1 துண்டு
- எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி
- பூண்டு- 5 பல்
- சிக்கன் சுக்கா செய்வது எப்படி..?
படி - 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்து அரைப்பதற்காக எடுத்துவைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்றாக பொன் நிறம் வரும் வரை வறுத்து சிறிது நேரம் ஆற வைத்து கொள்ளுங்கள்.
படி - 2
இப்போது வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் எடுத்துவைத்துள்ள எலுமிச்சை சாறு, பூண்டு மற்றும் இஞ்சி இவை அனைத்தினையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.
படி - 3
அடுத்து எடுத்துவைத்துள்ள 1 கிலோ சிக்கனை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பவுலில் சிக்கன் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா, தயிர் 4 தேக்கரண்டி, மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி அனைத்தினையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.
படி -4
கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன் நிறமாக வதக்கி எடுங்கள்.
அதன் பிறகு ஊறவைத்துள்ள சிக்கன், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிய துண்டு வெல்லம் அனைத்தையும் நன்றாக கரண்டியால் முன்னும் பின்னும் பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
படி-5
இப்போது அடுப்பில் இருக்கும் சிக்கன் நன்றாக பொன் நிறம் போல வெந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலையை சிக்கன் சுக்கா மீது தூவி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான சிக்கன் சுக்கா தயார்.
ஒரு மணி நேரத்தில் செய்யக்கூடிய இந்த செட்டிநாடு சிக்கன் சுக்காவை நீங்களும் உங்கள் குடும்பம் சகிதம் இன்றே சாப்பிட்டு மகிழுங்கள்.