இந்த சுவையான மசாலா நீர் மோர் செய்து பாருங்கள்

#Recipe #Preparation #Cooking
Mani
2 years ago
இந்த சுவையான மசாலா நீர் மோர் செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்:

  • 400 tbsp தயிர்
  • 2 துண்டு இஞ்சி
  • 4 கொத்து கருவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய் 
  • தேவையான அளவு உப்பு

செய்முறை:

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட 400 கிராம் அளவிலான தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் நான்கு பச்சை மிளகாய், இரண்டு துண்டு இஞ்சி, பச்சை கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மையாக அரைத்த தயிருடன் ஒரு லிட்டர் அளவிற்கான தண்ணீரை ஊற்றி ஒரு முறை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். வடிகட்டியை வைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் அளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின் இந்த தாளிப்பை மோருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மசாலா நீர் மோர் தயாராகிவிட்டது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!