உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.99 கோடியாக அதிகரிப்பு

#world_news #Corona Virus #Covid 19 #Covid Vaccine #Death #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.99 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 65 கோடியே 28 லட்சத்து 18 ஆயிரத்து 401 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4