நல்ல லாபத்தை அடையவுள்ள இரு ராசியினர் , அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
நல்ல லாபத்தை அடையவுள்ள இரு ராசியினர் , அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நண்பர் உதவியால் நன்மை அடைவீர்கள்.
பரணி: பண வருவாயில் உண்டான தடைகள் விலகும். நிதிநிலை உயரும்.
கார்த்திகை 1: அரசியல் பிரமுகர் உதவியுடன் செயலில் லாபம் காண்பீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.
ரோகிணி: குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: வெளியில் இருந்து வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மனதில் குழப்பமும் செயலில் தடுமாற்றமும் ஏற்படும். நிதானித்து செயல்படவும்.
திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் இன்று சங்கடப்படுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: உங்கள் கவனச் சிதறலால் எதிர்பார்த்தவற்றில் எதிர்மறையான பலன்கள் உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தின் தேவைக்காக வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்து சமாளிப்பீர்கள்.
பூசம்: புதிய முயற்சிகள் இன்று பலன் தராமல் போகும். வழக்கமான செயல்களிலும் நிதானம் தேவை.
ஆயில்யம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பில் இருந்த பணம் கை கொடுக்கும்.

சிம்மம்
மகம்: புதிய முயற்சி பலன் அளிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
பூரம்: சிலருக்கு புதிய வேலை அமையும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.
உத்திரம் 1: உங்களது முயற்சிகள் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சியை உண்டாக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.
அஸ்தம்: உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறைக்கு பலன் உண்டாகும். லாபம் அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: பணியிடத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி: மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறியும் தாமதமும் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3: முயற்சியை நிறைவேற்ற வேகமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவி நன்மை தரும்.

விருச்சிகம்
விசாகம் 4: செயல்களில் உண்டான தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும்.
அனுஷம்: பிரச்னைகள் இன்று உங்களைத்தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கேட்டை: அரசு வழியில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். குறுக்குவழி செயல்களால் சங்கடம் தோன்றும்.

தனுசு
மூலம்: உங்கள் கனவு நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் வெற்றியாகும்.
பூராடம்: வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.
உத்திராடம் 1: நண்பர்கள் உதவியுடன் முக்கிய செயலில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: கடவுளின் அருளால் எதிர்ப்புகள் விலகும். செயலில் சாதகமான நிலையைக் காண்பீர்கள்.
திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த ஒரு முயற்சி உங்களுக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த பலனைக் காண்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: குடும்ப உறவுகளிடம் மனக்கசப்பு ஏற்படும். அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
சதயம்: பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: உங்களது முயற்சிகள் இழுபறியாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் போகும்.

மீனம்
பூரட்டாதி 4: இன்று பணியில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடம் உண்டாகும்.
உத்திரட்டாதி: பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் செயல்கள் லாபத்தை உண்டாக்கும்.