இந்தியன் 2வில் விவேக்கின் காட்சிகள் நீக்கப்படுமா?

#TamilCinema #Actor #Director
Mani
3 years ago
இந்தியன் 2வில் விவேக்கின் காட்சிகள் நீக்கப்படுமா?

"இந்தியன் 2" படப்பிடிப்பு தொடங்கியபோது, ​​விவேக் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த விவேக், கமல்ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பொது மேடைகளில் பேசி வந்தார்.

இந்தியன் 2வில் விவேக்கின் கனவு நனவாகியது.படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்கள் கமலுடன் அவரும் நடித்தார். அதன் பிறகு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விவேக்கும் 2021ல் இறந்தார்.இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது மீண்டும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், விவேக் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மற்றொரு நகைச்சுவை நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவேக்கின் காட்சிகளை படத்தில் இருந்து நீக்கும் முடிவை கைவிட்ட ஷங்கர் விவேக்கின் காட்சிகளையே படத்திலேயே வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதன் பிறகு விவேக் படத்திற்கு யார் டப்பிங் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4