'இந்தியன் 2' வில் மீண்டும் இணைந்த காஜல் அகர்வால்

#TamilCinema #Actress
Mani
3 years ago
'இந்தியன் 2' வில் மீண்டும் இணைந்த காஜல் அகர்வால்

ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாலும், காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததாலும், அவர் இந்தியன் 2வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காஜல் அகர்வால், விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி எடுக்கும் வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் இணைந்துள்ளார். காஜல் அகர்வால் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருப்பதாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேக்கப் அறையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4