அஜித்,விஜய் இடத்திற்கு போட்டிபோட நினைக்கும் மூன்றெழுத்து வாரிசு நடிகர்.
விஜய், அஜித் இருவரும் தங்களது படங்கள் வெற்றியோ, தோல்வியோ கோடி கோடியாய் வசூலை அள்ளுவதிலும், ரசிகர்கள் பட்டாளங்களை வைத்துக்கொள்வதில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர். இவர்களுக்கு கோலிவுட்டையும் தாண்டி இந்திய அளவில் இருவருக்குமே நட்சத்திர அந்தஸ்து உள்ளது.
அந்த வகையில், இவர்களுடனே நடிக்க வந்த தமிழ் சின்மாவின் பிரபல வாரிசு நடிகர் ஒருவர், நட்சத்திர அந்தஸ்த்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். நட்சத்திர அந்தஸ்து என்பது ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறிவிடும். மேலும் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அதிகம். அப்படி பல நடிகர், நடிகைகளுக்கு அசால்ட்டாக கிடைக்கும் நட்சத்திர அந்தஸ்து பிரபல மூன்றெழுத்து நடிகருக்கு கிடைக்காமல் உள்ளது.
90 களில் அஜித் ,விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டியாக இருந்த நடிகர் ஒருவர், தொடர் பட தோல்வியால் பல பட வாய்ப்புகள் அவருக்கு வராமல் இருந்தது. அதையும் தாண்டி இன்று தனது நடிப்பின் மூலமாக பல ரசிகர்கள் பட்டாளங்கள், தனக்கென தனி தயாரிப்பு நிறுவனம் என வைத்துக்கொண்டு பெருமளவில் கல்லா கட்டி வருகிறார். அவர் தான் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகர் சூர்யா.
அண்மையில் வெளியான உலகநாயகனின் விக்ரம் படத்தில் நடித்த சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து வில்லத்தனத்தை தெறிக்கவிட்டிருப்பார். இப்படத்திற்கு முன்பாக இவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் சூர்யாவின் கேரியரை பெரிய அளவில் கொண்டு போனது. அதிலும் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யாவுக்கு கிடைக்கப்பெற்றது.
இப்படி பல சாதனைகளை புரிந்தும், அஜித், விஜய் இடத்தை சூர்யாவால் பிடிக்க முடியாமல் உள்ளார். இதற்கான காரணம், சூர்யாவின் முந்தைய இரண்டு படங்களும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு ஓடிடியில் ரிலீசாகி வெற்றிப் பெற்றது. இதுவரை நட்சத்திர நடிகர்களான விஜய், அஜித்தின் ஒரு திரைப்படம் கூட எந்த சூழ்நிலையிலும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவில்லை. முதலில் திரையரங்குகளில் ரிலீசான பின்பு தான் ஓடிடியில் ஒளிபரப்பாகும்.
அதற்கான காரணம், எப்போதும் திரையரங்கில் ஒரு படம் வெளியானால் அந்த படத்தின் அந்தஸ்து உயரும். அதுவும் முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்கில் ஓடினால், முதல் நாள் முதல் காட்சியே பல கோடி வரை கல்லா கட்டும். ஆனால் ஓடிடி படங்கள் அப்படி கிடையாது, இதனடையே இனிமேலாவது சூர்யா ஹீரோவாக நடிக்கும் படங்களை திரையரங்கில் வெளியிட்டால் விஜய், அஜித் போல நட்சத்திர அந்தஸ்த்தை கூடிய விரைவில் பெறுவார் என அவருக்கு அட்வைஸ் வழங்கப்பட்டு வருகிறது.