இல்லற வாழ்வில் பிரச்சனையின்றி வாழக்கூடிய இரு ராசியினர் , அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
இல்லற வாழ்வில் பிரச்சனையின்றி வாழக்கூடிய இரு ராசியினர் , அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறும்.
கார்த்திகை 1: பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: விலகிச் சென்றவர்கள் உங்களைத்தேடி வருவர். உங்களின் எண்ணம் பூர்த்தியாகும்.
ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி பலிதமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: குல தெய்வ அருளால் செயல்களில் வெற்றி ஏற்படும். நீங்கள் எண்ணியது நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். உங்களது முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் தோன்றும். பணத்தேவை அதிகரித்து சிரமத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம் 1, 2, 3: பணியிடத்தில் காலையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், மாலையில் நன்மை உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4: காலையில் செயல்கள் இழுபறியாகும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். ஓய்வின்றி உழைத்து எண்ணியதை அடைவீர்கள்.
ஆயில்யம்: செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்
மகம்: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். மாலையில் திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.
பூரம்: எதிர்பார்த்த செய்தி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
உத்திரம் 1: பழைய முதலீடுகளில் இருந்து வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டியை சமாளிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு மாலையில் பூர்த்தியாகும்.
அஸ்தம்: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி வெற்றியாகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
சித்திரை 1, 2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.

துலாம்
சித்திரை 3, 4: வாழ்க்கைத்துணை உதவியுடன் முயற்சியில் நன்மை காண்பீர்கள். நிதிநிலை உயரும்.
சுவாதி: கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் ஏற்படும். தந்தை வழியே சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர்கள் என்றாலும் பணவரவு இழுபறியாகும்

விருச்சிகம்
விசாகம் 4: காலையில் எச்சரிக்கை அவசியம். யாரிடமும் வீண் விவாதங்கள் வேண்டாம்.
அனுஷம்: பணியிடத்தில் உங்களை சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். அமைதி காப்பது நன்மையாகும்.
கேட்டை: கடவுள் வழிபாடு இன்னலை அகற்றும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்

தனுசு
மூலம்: காலையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதன்பின் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும்.
பூராடம்: பணியிடத்தில் விரும்பியதை அடைவீர்கள். உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவை
உத்திராடம் 1: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவோணம்: நண்பர்கள் ஒத்துழைப்பு கூடும். முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும்.
அவிட்டம் 1, 2: வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். செயலில் நன்மை உண்டாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.
சதயம்: பணியில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரட்டாதி 1, 2, 3: திருப்பங்கள் நிறைந்த நாள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து விலகுவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: குடும்பத்தில் சலசலப்புகள் உண்டாகும் என்றாலும் அதை சரி செய்வீர்கள்.
உத்திரட்டாதி: புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும். இருப்பிடத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
ரேவதி: பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.