கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் பேச்சு!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #IMF #Meeting #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் பேச்சு!

நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் பேசியுள்ளார்.

 zoom தொழில்நுட்பம் ஊடாக இந்த கலந்துரையாடல்  நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில்  பேசப்பட்டுள்ளது.

 இதேவேளை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதியளித்தல் தொடர்பில் அனைத்து தரப்பினரிடையேயும்  நம்பிக்கையான கருத்து  ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4