பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வருகை
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணிஅல்பனீஸ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அவரது பயணத்தில் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் மற்றும் உயர்மட்ட வர்த்தகக் குழுவும் உள்ளடங்கும்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி, ஹோலி பண்டிகைக்காக அவர் வரும் மார்ச் 8ம் தேதி அகமதாபாத்துக்கு செல்கிறார். பின்னர் மார்ச் 9-ம் தேதி மும்பை செல்கிறார். அவரும் அன்றைய தினம் டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது வருடாந்திர கூட்டத்தில் விரிவான நட்புறவு திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தவிர, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதிப்பார்கள். இந்த பயணத்தின் போது அல்பானீஸ் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பேசுவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.