நண்டுக்குழம்பு சாப்பிட்ட நாக்கிற்கு நண்டு ரசம் சாப்பிட்டால் எப்படியிருக்கும் ? இன்று செய்து பாருங்கள்..

#சமையல் #உணவு #இன்று #தகவல் #லங்கா4 #Cooking #Crab #dinner #today #Lanka4
நண்டுக்குழம்பு சாப்பிட்ட நாக்கிற்கு நண்டு ரசம் சாப்பிட்டால் எப்படியிருக்கும் ?  இன்று செய்து பாருங்கள்..

மீன் குழம்பு, நண்டு குழம்பு என்று வார இறுதியில் தவறாமல் சாப்பிடுவது வழக்கமாக வைத்திருப்போம், ஆயினும் நண்டுக்குழம்பிலும் இரவு வேளைக்கு நண்டு ரசம் சமைத்து சாப்பிட்டால் நண்டுக்குழம்பிலும் பன்மடங்கு உருசியானது தெரியுமா?

தெரியாவிட்டால் வாருங்கள் இந்த சமையல் குறிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள் தேவைக்கேற்றவாறு...

  • கடல் நண்டு
  • மிளகு தூள்
  • மிளகாய் தூள்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • பிரிஞ்சி இலை
  • தக்காளி
  • வெங்காயம்
  • உப்பு

படி: 1
முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

படி: 2
இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

படி: 3
அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

படி: 4
பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

படி: 5
பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

படி: 6
இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி பக்கத்தில் மிளகு தூள் வைத்துகொண்டு. அதனுடன் உணவைக்கலந்து உண்டால் உருசியோ வேற லெவல்.

இந்த நண்டு ரசத்தினை இரவு உண்ணும் பிட்டு, இடியாப்பம், சோற்றுடன் கலந்து உண்ண நீங்களும் இதை தெரிந்து வைத்திருப்பதற்கு மிகவும் ஒரு பாக்கியசாலிதான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4