அந்நியர்களுடன் வியாபாரத்தில் இணையும் மீன ராசிக்காரர்கள் , அதிக வருவாய் பெரும் கடக ராசியினருக்கான இன்றைய நாள்பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
அந்நியர்களுடன் வியாபாரத்தில் இணையும் மீன ராசிக்காரர்கள் , அதிக வருவாய் பெரும் கடக ராசியினருக்கான இன்றைய நாள்பலன்

மேஷம்: அசுவினி: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
பரணி: நீண்ட நாள் முயற்சிக்குப்பின் எண்ணம் நிறைவேறும். தாய் வழி உறவுகள் உதவி புரிவார்கள்.
கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும், சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உதவி புரிவார்கள்.
ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய முயற்சி ஒன்று பலிதமாகும்.
மிருகசீரிடம் 1, 2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பேச்சில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை: மற்றவர் செயல்பாடு உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அமைதி காப்பது நன்மையாகும்.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.

கடகம்: புனர்பூசம் 4: வேலைப்பளு அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் தேவை.
பூசம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: செயலில் இருந்த தடைகள் விலகும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சிம்மம்: மகம்: வீட்டில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். சிலர் சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.
பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்படுங்கள்.
உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும்.
சித்திரை 1, 2: வரவேண்டிய பணம் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.

துலாம்: சித்திரை 3, 4: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவுவார்கள்.
சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். அந்நியரிடம் எச்சரிக்கை அவசியம்.
விசாகம் 1, 2, 3: தொழிலில் போட்டியும் எதிர்ப்புகளும் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும்.
அனுஷம்: முன்னோர்கள் அருளினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும்.
கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு: மூலம்: வெளியூர் பயணத்தால் சங்கடங்கள் உண்டாகும். முயற்சிகள் இழுபறியாகும். கவனம் தேவை.
பூராடம்: எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் தோன்றும்.
உத்திராடம் 1: கடன் தொல்லையால் மனம் சங்கடப்படும். வேலையில் கவனமுடன் செயல்படுங்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: எண்ணம் நிறைவேறும். விரும்பியதை இன்று அடைவீர்கள். லாபமான நாள்.
திருவோணம்: வாழ்க்கைத் துணையால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கும்பம்: அவிட்டம் 3, 4: எதிரிகளால் உண்டான தொல்லைகள் நீங்கும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர்.
சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அந்நியர்களின் உதவி கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: உங்களுக்குத் தொல்லைக் கொடுத்தவர்கள் விலகுவர். முயற்சி வெற்றியாகும்.

மீனம்: பூரட்டாதி 4: பூர்வீக சொத்து பிரச்னையில் முடிவு தோன்றும். குழந்தைகள் குறித்த கவலைகள் வந்து செல்லும்.
உத்திரட்டாதி: அந்நியர் உதவியுடன் வியாபாரத்தில் உண்டான பிரச்னையை சரி செய்வீர்கள்.
ரேவதி: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.