பொருளாதார நெருக்கடியில் இருந்து விலகும் துலா ராசிக்காரர் , எதிரிகளால் சங்கடங்களை எதிர்கொள்ளும் மகர ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
பொருளாதார நெருக்கடியில் இருந்து விலகும் துலா ராசிக்காரர் , எதிரிகளால் சங்கடங்களை எதிர்கொள்ளும் மகர ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: முயற்சியை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரணி: தள்ளிப்போன முயற்சிகள் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்ப்பு விலகும்
கார்த்திகை 1: உங்கள் செயல்களில் குறை கூறியவர்கள் மாற்றம் அடைவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: உங்கள் எண்ணத்திற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். நீண்டநாள் முயற்சி நிறைவேறும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1, 2: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அந்நியரின் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
புனர்பூசம் 1, 2, 3: நண்பர்கள் உதவியுடன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். செயல்கள் லாபமாகும்.

கடகம்
புனர்பூசம் 4: அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி நன்மையாகும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
பூசம்: உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தினரால் உங்கள் செயல் வெற்றியாகும்.
ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்
மகம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.
பூரம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் வந்து நீங்கும். செலவுகள் அதிகரிக்கும்.
உத்திரம் 1: செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நன்மையாகும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: திடீர் செலவுகள் தோன்றும். புதிய இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக செலவுகள் மேற்கொள்வீர்கள்
சித்திரை 1, 2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு ஒன்றில், உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.

துலாம்
சித்திரை 3, 4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும்.
சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வெளியூர் பயணம் நன்மை தரும்.
விசாகம் 1, 2, 3: பொருளாதார நெருக்கடி விலகும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.

விருச்சிகம்
விசாகம் 4: தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.
அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
கேட்டை: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு
மூலம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். மனம் மகிழும்படியான நிலை ஏற்படும்.
பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1: புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
திருவோணம்: வியாபாரத்தில் புதிய முயற்சி வேண்டாம். பண வரவில் தடைகள் ஏற்படும்.
அவிட்டம் 1, 2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிரிகளால் சில சங்கடங்கள் உண்டாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: தம்பதி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மனம் மகிழும்படியான நிலை உண்டாகும்.
சதயம்: புதிய நட்பினால் உங்கள் வாழ்வில் திருப்புமுனை உண்டாகும். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

மீனம்
பூரட்டாதி 4: தொல்லைக் கொடுத்தவர்கள் விலகுவர். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.
உத்திரட்டாதி: எதிர்பார்த்த நிலையை அடைவீர்கள். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர்.
ரேவதி: உறவினருடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.