அமிதாப் பச்சன் ஒரு சண்டைக் காட்சியில் காயம் அடைந்ததால் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஹிந்தி திரையுலகில் பிக் பி என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், ப்ராஜெக்ட் கே என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமிதாப்பின் வலது இடுப்பில் காயம் ஏற்பட்டது. அவரது தசைகளும் பாதிக்கப்பட்டன.இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்கிறார்கள். இதனையடுத்து அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.
வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த விவரங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மூச்சு விடும்போதும், நடக்கும்போதும் வலி ஏற்படுகிறது என்றார்.இதன் விளைவாக, அவர் இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகலாம். மேலும், வலிக்கு மருந்து உட்கொள்வதாகவும், ரசிகர்கள் யாரும் தன்னைப் பார்க்க வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.