உடல் வலிமையற்று உடற்சோர்வால் அவதிப்படுகிறீர்களா? இம்முறையைச் செய்து பலனடையுங்கள்.

#ஆரோக்கியம் #அன்டனி #உடல் #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Body #Antoni #Theva #Antoni Thevaraj
உடல் வலிமையற்று உடற்சோர்வால் அவதிப்படுகிறீர்களா? இம்முறையைச் செய்து பலனடையுங்கள்.

நாம் முறையாக சாப்பிட்டும் உடலில் வலிமையற்று உடல் சோர்வாக காணப்படுமாயின் அதாவது வேலை செய்ய முடியாமல் இளைத்து காணப்படும் போது நமக்கு நல்ல சக்தியை உடலுக்கு கொடுத்து உடற்சோர்வினை நீக்கி வலிமை பெற நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் உடல் வலிமையை எவ்வாறு அதிகரிப்பது என்று விரிவாக பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்.

  • கசகசா – 2 டீஸ்பூன் 
  • வால்நட் – 10 
  • சாரா பருப்பு – 2 டீஸ்பூன் 
  • முந்திரி பருப்பு – 10 
  • பிஸ்தா பருப்பு – 10
  • பாதாம் – 10 
  • பால் – 1 டம்ளர் 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கசகசா, 2 டீஸ்பூன் சாரா பருப்பு, 10 வால்நட், 10 முந்திரி பருப்பு, 10 பிஸ்தா பருப்பு மற்றும் 10 பாதாம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் பாலினை ஊற்றி அதனுடனே அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இதனை இரவு உறங்க செல்லுமுன் பருகிகுங்கள். தினமும் இவ்வாறு செய்து வர உடல் நாளடைவில் பலமடைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். பின்னர் நீங்கள எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4