நந்திதா தாஸ் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நந்திதா தாஸ் தமிழ் திரைப்படங்களில் தனது பணிக்காக நன்கு அறியப்பட்டவர், குறிப்பாக மணிரத்னம் இயக்கிய "கண்ணத்தில் முத்தமிட்டால்" மற்றும் தங்கர்பச்சான் இயக்கிய "அழகி". இவர் பல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில், அவர் குழந்தைகள் உரிமைகள் மற்றும் பெண்கள் நலனுக்காகவும், சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும் தன்னை அர்ப்பணித்துள்ளார். பிளாக் இஸ் பியூட்டிஃபுல் பிரச்சாரத்தின் நிறுவனரும் அவர்தான்.
நந்திதா தாஸ் அளித்த பேட்டியில், "கல்லூரியில் படிக்கும் போது, இனவெறி பிரச்னையை பலமுறை எதிர்கொண்டேன். அதன்பிறகு, கருப்பு தோலுடன் எப்படி தன்னம்பிக்கையுடன் வாழ்வது என்று சில பெண்கள் என்னிடம் கேட்டனர். நான் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தேன், அவர்களின் உடலின் நிறத்தைப் பற்றி யோசித்தேன்.
இருப்பினும், நான் அழகுசாதனப் பொருட்களை வாங்க கடைக்குச் சென்றபோது, கடை ஊழியர்கள் என் நிறத்தைக் கவனித்து, ப்ளீச்சிங் கிரீம்களை என்னிடம் கொடுத்தனர். நான் இந்த தோல் நிறத்துடன் பிறந்தேன்; இந்த தோல் நிறத்துடன் நான் இறந்துவிடுவேன். அதனால, ஒயிட்னிங் க்ரீம் எதுவும் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்.