தமிழ் சமூகம் பாளாகிப்போக காரணம் இவைதான். அனைவருக்கும் பகிருங்கள். நல்ல தமிழ் சமூகத்தை உருவாக்குவோம்.
படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை இன்று பலராலும் பேசப்படுகின்றது.
பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சி தருகிறார்கள்.
போதை என்றால் என்ன? அதன் விபரீதம் எப்படிப்பட்டது என்பதை அறியாமலே போதை பாவனையில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். போதை என்பது தன்னிலை மறக்கச் செய்தல், உடல்-உள பாதிப்புகளை ஏற்படுத்தல் என்பதாகும்
மாணவர்கள் தங்களது இளமைப் பருவத்தில் நடாத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. இதன் விளைவாகவே போதைக்கு ஆளாகுகின்றார்கள். திடகாத்திரமாக, ஆரோக்கியமாக, ஆளுமையுள்ளவர்களாக வளர்வதற்கு போதை மற்றும் தீய நடத்தைகள் தடையாக இருக்கின்றன என்பதை உணராமல் இருக்கிறார்கள்.
இருந்த போதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை சற்று குறைவாகத்தான் என்று கூற முடிகிறது காரணம் மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது
சமூகத்தின் உயர்ந்த நிலையில் ஒருவரை உயர்த்திக்காட்டிட ஒரே வழியாக இருப்பது கல்வி மட்டுமே.
ஆரம்பத்தில் படித்து பல்கலைக்கழகம் வரை சென்று படிக்கும் மாணவர்கள் வாழ்க்கையையும் இறந்தகாலத்தில் பட்ட கஷ்டங்களையும் காப்பகத்தில் வைத்து பெரும்பாலும் அந்த போதைப்பொருள் பாவனையில் இறங்காமல் இருக்கிறார்கள் என்று தான் கூற முடியும்
குறிப்பாக யாழ் பல்கலைக்கழத்தில் போதைவஸ்து பாவனை என்பது குறைவாகவே காணப்படுகிறது அதற்குக்காரணம் வாரா வாரம் மதமும் மாணவர்களின் திறன்களை விருத்தி செய்யும் விதமாக விளையாட்டுப்போட்டி கலைவாரம் போன்று நடைபெற்று கல்வி மட்டுமில்லாமல் இவ்வாறான செயற்படுகள் மூலமாக மாணவர்களின் எண்ணங்கள் நல்லவற்றை நோக்கி மட்டுமே செல்கின்றது. அதனால் போதை வஸ்து அடிமைத்தனத்தை இவ்வாறான செயல்கள் குறைக்கின்றன.
சமூகம் குடும்பத்துக்காக படிக்க வேண்டும் கஷ்டத்தில் படித்து சமூகத்தையும் குடும்பத்திலும் உயர்நிலை அடைய வேண்டும் என தற்போதைய மாணவர்கள் விரும்புவதனால் அந்த செயற்ப்பாட்டில் ஈடுபடும் தன்மை குறைவடைகிறது.
யாழ் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பைத்தாண்டி புலமைப்பரிசில்கள் வழங்குவதனால் மாணவர்களின் சிந்தனைகள் அதை நோக்குவாரே செல்கிறது என கூறிக்கொள்ளலாம்.