நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையத் தடை

#Jaffna #Nallur #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Prathees
3 years ago
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையத் தடை

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல் ஒன்று அங்கு ஒட்டப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தால்  குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டுள்ளன. இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

தமிழரசர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள அரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக மந்திரிமனை திகழ்கிறது. 

 போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4