இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி!

#SriLanka #Sri Lanka President #IMF #China #Finance #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா உறுதியளித்துள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பை இலங்கை பெற இது வழிவகுக்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.

2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் மிகப்பெரிய  கடன் வழங்குனராக உள்ள சீனா தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4