பிதாமகன் தயாரிப்பாளர் வி ஏ துரை மருத்துவ சிகிச்சைக்கு ரஜினி சார் உதவ வேண்டும் என கோரிக்கை

#Cinema #TamilCinema
Mani
3 years ago
பிதாமகன் தயாரிப்பாளர் வி ஏ துரை மருத்துவ சிகிச்சைக்கு ரஜினி சார் உதவ வேண்டும் என கோரிக்கை

எவர்கிரீன் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நிறைய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை,  அவர் படைப்பில் பிதாமகன், என்னம்மா கண்ணு , லவ்லி,  விவரமான ஆளு,  லூட்டி,  கஜேந்திரா உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன.

சில படங்கள் வெற்றியை தந்தாலும் பல படங்கள் இவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது,  இதனால் இவர் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டார் பின் பணம் பொருட்களை இழந்துள்ளார். தொடர் தோல்வி மூலம் இவர் வாழ்க்கையின் சூழ்நிலை மிக மோசமாக போனது வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அவரை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில் தனி மரமாக இருப்பதாகவும் சர்க்கரை வியாதியின் மூலம் காலில் ஆறாத புன்னுடன் சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் வசித்து வருகிறார். அவர் தான் மிகுந்த சிரமத்தில் இருப்பதாகவும் யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டார் சமூக வலைத்தளத்தில்.

நான் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தவித்து வருகிறேன் எனக்கு யாரும் உதவி செய்ய இல்லை என்றார்,  எனக்கு நடிகர் ரஜினிகாந்த் நாற்பது ஆண்டு கால நண்பர் தன் நிலையை எடுத்துக் கூறிய உதவுமாறு திரைத்துறையினருக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மருத்துவ உதவி கிடைக்க தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  இது சூழ்நிலை அறிந்த முன்னணி கதாநாயகனான சூர்யா மருத்துவ செலவுக்காக 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4