நடிகர் அல்லு அர்ஜுன் "புஷ்பா-2" படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#Cinema #TamilCinema #Actor #Director
Mani
3 years ago
நடிகர் அல்லு அர்ஜுன் "புஷ்பா-2" படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் 2021 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். இப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூல் செய்தது.

இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை 'ராதே ஷ்யாம்'  உள்ளிட்ட படங்களை தயாரித்த பூஷன் குமார் தயாரிக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "இந்த ஒத்துழைப்பிற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். சந்தீப் ரெட்டி வாங்காவின் பொன்மொழி தனிப்பட்ட முறையில் என்னைத் தொட்ட ஒன்று. நீண்ட காலமாக நினைவில் நிற்கும் ஒரு படத்தை உருவாக்குவோம் என்று நம்புகிறேன்" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4