இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு

#SriLanka #Accident #Death #Bus #kandy #Colombo #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு-கண்டிவர வீதியின் மாவனெல்ல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் மோதியதில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த  பேருந்தும்  நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தும்  நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேரூந்து ஓட்டுனர் உட்பட  23 பேர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நீர்கொழும்பைச் சேர்ந்த 59 வயது நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4