மொரகல்ல கடற்கரையில் ரஷ்ய பிரஜை நீரில் மூழ்கி பலி

#Hotel #Death #SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamilnews #beach
Prathees
3 years ago
மொரகல்ல கடற்கரையில்  ரஷ்ய பிரஜை  நீரில் மூழ்கி  பலி

பேருவளை மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஷெப்டர்ன் ஷார்ஜீ என்ற 38 வயதுடைய ரஷ்யரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ரஷ்ய பிரஜை தனது மனைவியுடன் மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய பிரஜை அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிர்காப்பாளர் ஒருவர் உடனடியாக தலையிட்டு பேருவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4