8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - மனம் திறந்த நடிகை குஷ்பூ!

#Cinema #TamilCinema #Sexual Abuse
Mani
3 years ago
8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - மனம் திறந்த நடிகை குஷ்பூ!

தான் 8 வயதாக இருக்கும் போது தனது தந்தையே தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தார் என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டு ரஜினிகாந்த் பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் குஷ்பு. தமிழ் மட்டுமல்லாதமல் இந்தி, தெலுங்கு கன்னடம் மலையாளம் என இந்தியாவின் பல மொழிகளில் நடித்துள்ள குஷ்பு, தி பிரிங் ட்ரெய்ன் என்ற பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு முதல் நடிகை குஷ்பூ அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், மோஜோ ஸ்டோரிக்காக பர்கா தத்துடனான உரையாடலில் பேசிய குஷ்பு, தன் தாயார் மிகவும் மோசமான திருமணத்தை உறவை எதிர்கொண்டார் என்றும் தன் மனைவியை அடிப்பதும் தனது ஒரே மகளை பாலியல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தனது பிறப்புரிமை என்று நினைத்தவர் தன் தந்தை என்றும் கூறியுள்ளார். தன் தந்தை 8 வயதாக இருக்கும்போது அவர் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார். 15 வயது வரை அவரை எதிர்க்கும் தைரியம் தனக்கு இல்லை என்றும் நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

மேலும் தான் இது பற்றி சொன்னால் தன்னுடைய தாயார் கூட இதை நம்பா மாட்டார் என்ற பயம் இருந்ததாகவும், ஆனால் 15 வயதில் தன் தந்தைக்கு எதிராக செயல்பட தொடங்கியதாகவும் குஷ்பூ குறிப்பிட்டார் . தனக்கு 16 வயது கூட ஆகவில்லை அப்போது, தங்களிடம் இருந்த அனைத்தையும் எடுத்து விட்டு தந்தை பிரிந்து சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு கடினமாக காலகட்டத்தில், வாழ்க்கையில் போராடி மீண்டு வந்ததாக குஷ்பூ கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4