பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்

#Pakistan #Festival #University #Hindu #students #Attack #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்

ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

அப்போது அங்கு வந்த ஒரு அமைப்பினர் இந்து மாணவர்களை ஹோலி கொண்டாடக்கூடாது என கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் இந்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக துணைவேந்தர் கூறும் போது, பல்கலைக்கழக வளாகத்தில் ஹோலி நிகழ்ச்சி நடத்த மாணவர்கள் அனுமதி பெறவில்லை என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். 

இந்த சம்பவம் இந்து மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4