பாணின் விலையில் மாற்றம்: அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

#SriLanka #prices #Food #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
பாணின் விலையில் மாற்றம்: அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை  10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

ஒரு இறாத்தல்  150 ரூபா தொடக்கம் 180 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறான எந்தவொரு விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஜயவர்தன தெரிவித்தார்.

பாண்  மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4