துருக்கி கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில் 7 பேர் கைது

#Turkey #துருக்கி #football #Attack #Arrest #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
துருக்கி கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில் 7 பேர் கைது

துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் குர்து இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்று விளையாடியது. அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பினர் கோஷங்களை எழுப்பினர். 

தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் வெடித்த நிலையில், மைதானத்திற்குள் சிலர் பட்டாசுகளைக் கொளுத்தி தூக்கிப் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களையும் மைதானத்திற்குள் வீசி எறிந்தனர். இதனால் அங்கு ரசிகர்களிடையே வன்முறை உருவானது. 

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4