சிவகார்த்திகேயன் அவர்களின் சம்பளத்தை குறைத்தார்

#TamilCinema #Actor #Director #Salary
Mani
3 years ago
சிவகார்த்திகேயன் அவர்களின் சம்பளத்தை குறைத்தார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், டாக்டர், டான் போன்ற படங்களின் மூலம் உயர்ந்து வெற்றியும் பெற்றவர். ஆனால், அதைத் தொடர்ந்து அவர் நடித்த பிரின்ஸ் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், சிவகார்த்திகேயன் வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட ரூ.5 கோடியை குறைத்துள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.  இதற்கு முன் அவர் நடித்த பிரின்ஸ் படத்தின் தோல்வியால் சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4