தமிழர் சமூகங்களில் பெற்றோரின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் அல்லல்படும் பெண்பிள்ளைகள் .

#wedding #Foriegn #University #Women #Article #Lanka4
Kanimoli
1 year ago
தமிழர் சமூகங்களில் பெற்றோரின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் அல்லல்படும் பெண்பிள்ளைகள் .

திருமணம் ஆணும் பெண்ணும் அன்பு, நேசம், கருணை, ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவுதல், நலம் நாடுதல் ஆறுதலாயிருத்தல். விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகளுடன் கூடிய  மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும்

இருந்த போதிலும் இன்றைய தமிழ் சமூகத்தில் திருமணம் என்பதை தாண்டி வெளிநாட்டு மோகத்தால் கல்விகற்கும் பிள்ளைகளை ஆராய்ந்து அறியாமல் வெளிநாட்டு ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் குறுகிய மனதிற்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள் 

இதனால் வருங்கால அறிவாளிகளின் எதிர்காலம் அழிவடைகிறதா என்ற ஒரு சந்தேகம் நம் அனைவருக்குமே எழுகிறது. பெற்றோரின் வெளிநாட்டு மோகத்தால் மாணவிகள் பலிக்கடாவாகும் சூழல் நிலவுகிறது என்று கூறினால் மிகையாகாது 

 நல்லமுறையாக வாழவேண்டிய பிள்ளைகள் தற்பொழுது தமிழ் சமூகத்தில் தாண்டவமாடும் வெளிநாட்டு மோகத்தாலும், பெற்றவர்களின் சொல்லை தட்டமுடியாத காரணத்தாலும் பல இளம் தளிர்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்வது பெரும் வேதனை அழிக்கின்றது 

அவர்களின் கல்விகளில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆசைவார்த்தை காட்டி வெளிநாட்டு மோகத்திற்குள் தள்ளி விடும் பெற்றோர் எதிர்காலம் கண்முன்னே பாழாய் போவதைக்கூட பொருட்படுத்தாமல் இவ்வாறு பணத்தாசையால் செய்வது கவலையை உண்டாக்கிறது 

அவன் வெளிநாட்டில் உள்ளான் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் 
குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்காமல்  அறிவு ஜீவிகள் வெளிநாட்டு
மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவி பிள்ளைகளை 
அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்.

இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா??

படிக்கும் பெண்சமூகம் இருக்கும் இக்கால கட்டிடத்தில் இவ்வரும் ஒரு சமூகம் பூதாகரமாக வளர்ச்சியடைந்து வருவது கவலையளிக்கிறது படிக்கும் பெண் பிள்ளைகளை வெளிநாட்டு மாப்பிள்ளையின் தலையில் கட்டி விடுவதால் விருப்பம் இன்றி அந்த பந்தத்தில் நுழைந்து ஒரு கட்டிடத்தில் தற்கொலை,கொடுமை என்று தள்ளப்பட்டு வாழ்க்கையை சீர்காழிக்க போன்றோரே காரணமாக மாறி விடுகிறார்கள் 

எதோ ஒரு காரணத்தால் பெண் சமூகம் வெளிநாட்டு திருமணம் என்ற போர்வையில் அழிய குடும்பமே காரணமாக அமைவது தான்  மறுக்கப்படாத உண்மையாக அமைகிறது 

நிச்சயமாக பெண்களை இவ்வாறானதொரு வெளிநாட்டு திருமணம் என்ற பேரில் அழிவுப்பாதைக்குள் இட்டுச்செல்லாமல் பெண்களையும் ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் வளரவிட்டு ஆவண செய்வது அவசியம்

நன்றி 
-சிந்து-