இந்தி படத்தில் சீதா வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசி வருவதாக தகவல்

#TamilCinema #Tamil #Actress
Mani
3 years ago
இந்தி  படத்தில் சீதா வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசி வருவதாக தகவல்

நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்ருதிஹாசன் இந்தி படங்களில் நடித்துள்ளார். ஃபேமிலிமேன்-2 என்ற இந்தி வெப் சீரிஸில் நடித்த பிறகு சமந்தாவுக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைத்தன. ஹிந்தியில் கதை கேட்கப்பட்டு வருவதாகவும், அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாரா இந்தி மொழி படங்களிலும் கால் பதித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹிந்தியில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவிக்கும் ஹிந்தி வாய்ப்பு கிடைத்தது. ராமாயணக் கதையை மையமாக வைத்து புதிய படம் தயாராக உள்ளது, ராமனாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். ராவணனாக ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை மது மந்தேனா இயக்கவுள்ளார்.

இப்படத்தில் சீதா வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சாய்பல்லவி இன்னும் இந்தி படங்களில் நடிக்கவில்லை. ராமாயணம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தேசிய படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4