சிம்ம ராசிக்காரர்களுக்கான குடும்ப பிரச்சனைகள் தீரும் , வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் துலா ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
சிம்ம ராசிக்காரர்களுக்கான குடும்ப பிரச்சனைகள் தீரும் , வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் துலா ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பரணி: எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். பெற்றோரின் ஆதரவால் நிதிநிலை உயரும்.
ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். பிள்ளைகள் வழியே ஆதாயம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.
திருவாதிரை: உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: செயல்களில் லாபம் காண்பதற்காக நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பணப்புழக்கம் கூடும்.

கடகம்
புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
ஆயில்யம்: சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்
மகம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். வருமானத்திற்கான முயற்சி லாபமாகும்.
உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றி பெறும். புதிய வாடிக்கையாளரால் லாபம் காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம்: உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடைவீர்கள்.
சித்திரை 1, 2: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். தொழிலை விரிவு செய்வீர்கள். நிதிநிலை உயரும்.

துலாம்
சித்திரை 3, 4: வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். முயற்சி தாமதமாகும். கவனமாக செயல்படவும்.
சுவாதி: விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: குடும்பத்தினர் வகையில் திடீர் செலவுகள் தோன்றும். அதை போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.
அனுஷம்: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.
கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு
மூலம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். முயற்சி பலிதமாகும்.
பூராடம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வருமானம் தடையின்றி வரும்.
உத்திராடம் 1: பணியாளர்கள் இன்று தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.
திருவோணம்: எந்தவொரு செயலிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நன்மையாகும்.
அவிட்டம் 1, 2: நிதிநிலை சீராகும். தந்தை வழி உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான செயல்களிலும் கவனம் அவசியம்.
சதயம்: வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.
பூரட்டாதி 1, 2, 3: பிறரது பிரச்னையில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம்.

மீனம்
பூரட்டாதி 4: மனதில் உற்சாகம் உண்டாகும். நீங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும்.
ரேவதி: உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும்