உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்: நடிகர் விக்ரம் ட்வீட்

#TamilCinema #Cinema #Kamal #2023
Mani
3 years ago
உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்: நடிகர் விக்ரம் ட்வீட்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் எக்கசக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் உண்மையான சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

சமீபகாலமாக நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’தங்கலான்’ படம் ஹேஸ்டாக்வுடன் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சூரியன் உதிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, ‘உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்’ என 'தங்கலான்' படத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இது படக்குழுவினர் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4