உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கானச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் -தேர்தல்கள் ஆணைக்குழு

#Election #Election Commission #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கானச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் -தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை 05 நாட்களுக்குள்ளும் ஏனைய வாக்குச்சீட்டுகளை 20 முதல் 25 நாட்களுக்குள்ளும் அச்சிட்டு வழங்க முடியும் என அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக அதற்கான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உரிய பாதுகாப்புகளை வழங்க முடியும் என தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4