ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை அழைத்துவர மடகஸ்கார் செல்லவுள்ள CID

#Crime #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை அழைத்துவர மடகஸ்கார் செல்லவுள்ள CID

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கருக்குச் செல்லவுள்ளனர்.

மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட 'ஹரக் கட்டா' மற்றும் குடு சலிந்து ஆகிய இரு போதைப்பொருள் கடத்தல்காரர்களை இந்த நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கிலேயே மடகஸ்கருக்குச் செல்லவுள்ளனர்.

இந்த நாட்டின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களான நந்துன் சிந்தகா அல்லது "ஹரக் கட்டா" மற்றும் சலிந்து மல்ஷிக அல்லது "குடு சலிந்து"  உட்பட 8 பேர் கடந்த 01 ஆம் திகதி மடகஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

அவர் மலகாசி நாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டா உள்ளிட்ட 05 பேர் பெப்ரவரி 12 ஆம் திகதி தனியார் ஜெட் விமானம் மூலம் நாட்டின் விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டபோது, ​​ஹரக் கட்டா பெரும் பணக்காரராகத் தோற்றமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4