உடல்நிலையில் கவனம் கொள்ளவேண்டிய கும்ப ராசியினர் , நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் தனுசு ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
உடல்நிலையில் கவனம் கொள்ளவேண்டிய கும்ப ராசியினர் , நீண்டநாள் எண்ணம் நிறைவேறும் தனுசு ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : குல தெய்வ அருளுடன் திட்டமிட்ட செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.
பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கார்த்திகை 1 : கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகி எளிய அணுகுமுறையால் நன்மை அதிகரிக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். பெற்றோரின் ஆதரவால் நிதிநிலை உயரும்.
ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். பிள்ளைகள் வழியே ஆதாயம் காண்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை : எதிர்பாராத வருமானம் வரும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். நன்மையான நாள்.
புனர்பூசம் 1, 2, 3 : நேற்றிலிருந்து இழுபறியாக இருந்த முயற்சி இன்று நடந்தேறும்.

கடகம்
புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.
பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். மற்றவர்கள் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
ஆயில்யம்: சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்
மகம் : அதிகாரிகள் ஆதரவுடன் உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய மாற்றத்தை அடைவீர்கள்.
பூரம் : பண வரவு திருப்தி தரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். லாபகரமான நாள்.
உத்திரம் 1 : தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: வருமானத்தை அதிகரிப்பதற்காக புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம்: உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடைவீர்கள்.
சித்திரை 1, 2: தடைபட்டிருந்த வருவாய் வந்து சேரும். தொழிலை விரிவு செய்வீர்கள். நிதிநிலை உயரும்.

துலாம்
சித்திரை 3, 4 : குலதெய்வ அருளால் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
சுவாதி : குடும்பத்தின் தேவை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3 : குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் புதிய முயற்சி நன்மையில் முடியும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வெளியூர் பயணம் வெற்றி தரும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.
அனுஷம் : உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கான மாறுதல் வரும். விருப்பம் நிறைவேறும் நாள்.
கேட்டை : அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.

தனுசு
மூலம் : வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வருமானம் அதிகரிக்கும்.
பூராடம் : நிதி நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
உத்திராடம் 1 : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பகைவர்கள் விலகிச் செல்வர்.
திருவோணம் : சிலர் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு விமர்சிப்பர். அதைப் பொருட்படுத்தாதீர்.
அவிட்டம் 1, 2 : உங்கள் ஆரோக்யம் சீராகும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நேற்று இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.
சதயம் : புதிய முயற்சி நன்மை தரும். உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3 : குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி அடையும்.

மீனம்
பூரட்டாதி 4 : செயல்களில் சங்கடம் உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : தொழிலில் இன்று தீவிரமாக செயல்படுவீர். அலுவலக பணியில் வாக்கு வாதம் வேண்டாம்.
ரேவதி : செயல்களில் தடை தாமதம் ஏற்படும். கவனக்குறைவுக்கு இடம் தராதீர்கள்.