புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

#Colombo #Train #Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மின்கயா ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் சிறுமியின் பெற்றோரை கண்டறியபொலிசார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்தனர்.

சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ளதுடன் நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4