அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா

#Recipe #How_to_make #Food
Mani
3 years ago
அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா

தேவையான பொருட்கள்:

3 காடை
1 பெரிய வெங்காயம் 
1 tbsp தயிர் 
20 gm கொத்தமல்லி 
5 gm புதினா 
1 tsp மஞ்சள் தூள் 
1 tsp மிளகுத் தூள் 
1 ts கரம் மசாலா தூள்
1 tbsp இஞ்சி பூண்டு விழுது
1 tsp மிளகாய் தூள்
1 ts மல்லி தூள்
தேவையான அளவு உப்பு

செய்முறை:

காடை பெப்பர் மசாலா செய்ய முதலில் காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு கால் ஊறவைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கரம் மசாலா போட்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பிரட்டவும். 3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், கழித்து தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.

அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும். பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை கப் மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும்.

இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.மேலே கொத்தமல்லித் தழை இறக்கி பரிமாறவும். சுவையான காடை பெப்பர் வறுவல் ரெடி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4