ஐரோப்பாவில் 70 கோடி வரை ஏலத்தில் விடப்படவுள்ள டைனோசர் எலும்புக்கூடு

#Switzerland #Dinosaur #skeleton #Auction #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
ஐரோப்பாவில் 70 கோடி வரை ஏலத்தில் விடப்படவுள்ள டைனோசர் எலும்புக்கூடு

சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. 

டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ஏப்ரல் 18ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட உள்ளதாக, கொல்லர் என்ற ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த எலும்புக்கூடு 60 முதல் 80 லட்சம் சுவிஸ் பிராங்குகளுக்கு (சுமார் ரூ.70 கோடி வரை) ஏலம் போகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4