வடகொரியாவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் மீட்பு

#America #War #Bomb #Rescue #NorthKorea #Forces #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
வடகொரியாவில் அமெரிக்க படைகளால் விட்டு செல்லப்பட்ட 110 வெடிகுண்டுகள் மீட்பு

கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே கடந்த 1950-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை நடைபெற்ற போர் கொரிய போர் என்று அழைக்கப்படுகிறது. இந்த போரில் இருநாடுகளுக்குமே வெளிநாடுகளின் ஆதரவு இருந்தது. வடகொரியாவை சீனா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியம் ஆதரித்தது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் ஆதரவு அளித்தன.

குறிப்பாக இந்த போரில் தென்கொரியாவுக்கு பெரும் பக்கபலமாக இருந்த அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் வடகொரியா மீது ஏராளமான குண்டுகளை வீசின.

2-ம் உலகப்போரின் போது ஒட்டுமொத்த கிழக்கு ஆசியாவிலும் வீசியதைவிட அதிகமான குண்டுகளை வடகொரியா மீது அமெரிக்கா வீசியதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கட்டுமான பணியின்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட கொரிய போர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்த நிலையில், கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4