காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இரண்டு குண்டுகள் கண்டுபிடிப்பு

#BombBlast #Bomb #Jaffna #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இரண்டு குண்டுகள் கண்டுபிடிப்பு

இன்றையதினம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்ணிவெடியானது தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணி ஒன்றில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்துள்ளது.

அதேநேரம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கேசன்துறை பொலிசார் இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், நீதிமன்றத்தின் நடவடிக்கையின் பின்னர் அந்த வெடிபொருட்களை மீட்டு செயலிழக்க செய்யவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4