குடும்ப தேவைகளை நிறைவேற்றி , வியாபாரத்தை விரிவு செய்ய நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
குடும்ப தேவைகளை நிறைவேற்றி , வியாபாரத்தை விரிவு செய்ய நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சி வேண்டாம்.
பரணி : நிலைமையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர். உங்கள் முயற்சி ஒன்று வெற்றி பெறும்.
கார்த்திகை1 : உங்களால் லாபம் அடைந்தவர்கள் இன்று தேடிவந்து உதவி செய்வார். சங்கடம் விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் மனநிலையில் பதட்டம் உண்டாகும். விழிப்புடன் இருப்பதால் நன்மை அதிகரிக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். செயல்களில் பின்னடைவு ஏற்படும். புதிய முயற்சி வேண்டாம்.
மிருகசீரிடம் 1, 2 : உறவினர்களிடம் இருந்த வந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : நண்பர்கள் உதவியுடன் நீங்கள் நினைத்தது நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சலசலப்பு நீங்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிக்கு அறிகுறி தோன்றும்.
புனர்பூசம் 1, 2, 3 : புதிய நட்பால் உற்சாகம் அடைவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம்
புனர்பூசம் 4 : முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.
பூசம் : பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரி விலகிச்செல்வார்கள்.
ஆயில்யம் : செயல்களில் வெற்றி காண்பீர்கள். நீண்டநாள் முயற்சி ஒன்று அனுகூலமாகும்.

சிம்மம்
மகம் : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர் ஆதரவால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூரம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர், பகைவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்.
உத்திரம் 1 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சிப்பீர்கள். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி புரிவர்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டு.
அஸ்தம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
சித்திரை 1, 2 : வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபம் தரும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். துணிச்சலுடன் செயல்பட்டுவீர்கள்.
சுவாதி : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நண்பர்கள் ஆதரவுடன் சரி செய்வீர்கள்.
விசாகம் 1, 2, 3 : எதிர்பாராத பிரச்னையை சந்திப்பீர்கள். நண்பர்கள் துணையுடன் தீர்வு காண்பீர்.

விருச்சிகம்
விசாகம் 4 : எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். நண்பர்களால் நேற்றைய பிரச்னை சரியாகும்.
அனுஷம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியான செயல் ஒன்று நிறைவேறும்.
கேட்டை : பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும்.

தனுசு
மூலம் : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.
பூராடம் : எதிர்ப்புகளை சமாளித்து தொழிலில் வெற்றி பெறுவீர்கள். செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் 1 : குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பம் இன்று நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள்.
திருவோணம் : தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.
அவிட்டம் 1, 2: வாகனப் பயணத்தில் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்
அவிட்டம் 3, 4 : திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவு வரும்.
சதயம் : வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த ஒன்றில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மீனம்
பூரட்டாதி 4 : சுறு சுறுப்பாக செயல்பட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
உத்திரட்டாதி : காணாமல் போன ஒரு பொருள் இன்று கிடைக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.
ரேவதி: உங்கள் முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.