பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

#Temple #God
Mani
2 years ago
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  திறக்கப்படுகிறது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 17ம் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு கோவில் உச்சியில் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் 19ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பங்குனி உத்திர ஆறாட்டு விழா வரும் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!