2019-2020-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு ரூ.9,609 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

#India #Tamil Nadu #Finance
Mani
1 year ago
2019-2020-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு ரூ.9,609 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாக பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்தார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2019-2020-ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ.9,609.376 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் 14 மற்றும் 15வது நிதி கமிஷன்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக பஞ்சாயத்துகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் (ஆர்ஜிஎஸ்) இயக்கத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.127.49 கோடி கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறனை மேம்படுத்த மாநிலங்களுக்கு இந்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஊராட்சிகளை வலுப்படுத்த ரூ.895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.